எனது அனுபவத்தின் அடிப்டையில்
இதை எழுதியுள்ளேன், புதியவர்களுக்கு பயன்படும் என்ற நோக்கில்.
ஆங்கில
எழுத்துருக்களைப் போல ஒரு எழுத்துருவிலிருந்து மற்றொரு எழுத்துருவுக்கு மாற்றுவது போல்
தமிழ் எழுத்துருக்களை மாற்ற இயலாது. காரணம் தமிழ் எழுத்துருக்கள் பல தட்டச்சு (விசை
பலகை) முறைகளை கொண்டுள்ளது.
உதாரணமாக கீழ்கண்ட தட்டச்சு முறைகள் உள்ளது
Typewriter (Old & New)
Tamil99
Phonetic
Inscript
Transliteration
பாமினி
எழுத்துருவில் தட்டச்சு செய்ததை வானவில் அவ்வையார் எழுத்துருவுக்கு மாற்ற இயலாது. இணையத்தில்
சில கன்வர்ட்டர்கள் கிடைத்தாலும் அவை வரைகலை தொழிலுக்கு பயன்படுத்தும் செந்தமிழ் போன்ற
எழுத்துருக்களில் வேறு எழுத்துருவுக்கு மாற்றுவதில்லை.
சில தமிழ் எழுத்துருக்களை அதன்
மென்பொருள் துணைகொண்டே பயன்படுத்த முடியும்.
தமிழில் தட்டச்சு
செய்யும் போது மேற்கண்டவைகளை மனதில் வைத்துக் கொண்டு எழுத்துருக்களைத் தெரிவு செய்ய
வேண்டும்.
ஒருங்குறி (யுனிகோட்)
நாம் சாதாரணமாக
பயன்படுத்தும் எழுத்துருக்களை இணையத்தில் பயன்படுத்த இயலாது. துவக்கத்தில் தமிழ் இணைய
தளங்ளை பார்வையிடும் போது அத்தளங்களில் எழுத்துருக்கள் சரிவர தெரியாது கட்டம் கட்டமாக
தெரியும், அத்தளத்திற்கான எழுத்துருவை தறவிறக்கி நம் கணினியில் பதிந்த பிறகே அத்தளத்தை
வாசிக்கலாம்.
இப்பிரச்னைக்கான தீர்வே யுனிகோட் எனப்படும் ஒருங்குறியாகும். ஒருங்குறி
மையத்தால் ஒவ்வொரு மொழிக்கும் ஓரிடம் ஒதுக்கப்பட்டது. இயங்குதளத்திலே யுனிகோட் எழுத்துரு
பொதிந்திருக்கும். யுனிகோட் எழுத்துருவை பயன்படுத்திய
கோப்புகளையோ, இடணையதளங்களையோ பார்வையிடும் போது தனியாக எழுத்துருவை தரவிறக்கத் தேவையில்லை.
எழுத்துருவை நிறுவுதல்
பாமினி எழுத்துருவை
பயன்படுத்த வேண்டுமென்றால் பாமினி எழுத்துருவை தெரிவு செய்து காப்பி செய்துகொண்ட பின்பு C டிரைவ் சென்று அங்குள்ள Windows போல்டர் உள் சென்று அங்குள்ள Fonts போல்டரில் பேஸ்ட் செய்ய வேண்டும்.
எழுத்துருவை பேஸ்ட் செய்யும் போது தட்டச்சு செய்ய பயன்படுத்த இருக்கும் எம்.எஸ். வேர்டோ
அல்லது வேறு ஏதேனும் மென்பொருளோ, அது திறந்திருந்தால் அதை மூடிவிட்டு மீண்டும் திறக்கவும்.
தரவிறக்க செய்ய
எழுத்துருக்கள் தரவிறக்கம் செய்ய