நீட் தேர்வு 2023 - பதிவு செய்ய மீண்டும் வாய்ப்பு
நீட் தேர்விற்கு விண்ணப்பிக்கும் நாள் முடிவடைந்த நிலையில் தற்பொழுது மீண்டும் விண்ணப்பிக்க ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 15 வரை இணையதளம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பினை இது வரை நீட் 2023 (UG)க்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.
குறிப்பு
விண்ணப்பிக்கும் பொழுது கவனமாக இருக்கவும். வீட்டிலேயே அல்லது கணினி மையத்திலோ விண்ணப்பிக்கும் பொழுது இறுதியாக சமர்ப்பிக்கும் முன்பு கவனமாக சரிபார்த்துவிட்டு சமர்ப்பிக்கவும்.
பதிவேற்றம் செய்யும் நிழற்படங்கள், கையொப்பம், கைரேகைகள், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் ஆகியவற்றை சரியாக பதிவேற்றம் செய்யவும்.
கைரேகை என்பது தேர்வு எழுதுபவரின் 10 கை விரல்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். சிலர் இரண்டு கட்டை விரல்களை மட்டுமே பதிவேற்றம் செய்துள்ளனர்.
கடந்த 8 - 10ந் தேதி வரை திருத்தம் செய்வதற்காக திறக்கப்பட்ட நீட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்த ஆவணங்களில் ஜாதி சான்றிதழ் மட்டுமே திருத்தம் செய்ய அனுமதிக்கப்பட்டது. எனவே, மாணவர்கள் தங்களது விவரங்களை கவனமாக பதிவு/பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ளவும்.