அபராதம் - PAN கார்டு உடன் ஆதாரை இதுவரை இணைக்காதவர்களின் கவனத்திற்கு!

 


மைய அரசு PAN கார்டு உடன் ஆதாரை இணைப்பதற்கு கால அவகாசம் கொடுத்து அதை பல முறை நீட்டித்து இறுதியாக இவ்வாண்டு மார்ச் 31 வரை இருந்தது.

இதுவரை இணைக்காதவர்களுக்கு இணைப்பு காலம் & அபராதத்தின் விபரம்:

  1. 01-04-2022 முதல் 30-06-2022-க்குள் இணைப்பதற்கு அபராதமாக Rs.500/-செலுத்தி இணைத்துக் கொள்ளலாம்.
  2. இதையும் தவறவிட்டவர்கள் 01-07-2022 முதல் இணைப்பதற்கு அபராதமாக Rs.1000 செலுத்த வேண்டும்.

பணம் செலுத்தியதிலிருந்து 4-5 நாட்களுக்குப் பிறகே PAN & ஆதார் இணைக்க முடியும். இணைக்க முடியவில்லை என்றாலும் செலுத்திய அபாரதத் தொகையை திரும்ப பெற முடியாது.

PAN & ஆதார் அட்டை இரண்டிலும் பெயர், பிறந்த தேதி, பாலினம் ஆகியவை சரியாக இருந்தால் மட்டுமே தற்பொழுது இணைக்க முடியும். அவ்வாறு சரியாக இருந்து இதுவரை இணைக்காதவர்கள் விரைவாக இணைத்துக் கொண்டு அதிகப்படியான அபராதம் செலுத்துவதிலிருந்து தவிர்த்துக் கொள்ளலாம்.

உங்களது PAN கார்டில் ஆதார் இணைந்து உள்ளதா என கீழ்வரும் லிங்கில் சென்று தெரிந்து கொள்ளுங்கள்.

PAN உடன் ஆதார் இணைப்பை தெரிந்துகொள்ள

PAN கார்டு & ஆதாரில் வேறுபாடு இருந்தால்?

PAN கார்டு சரியாக இருந்து ஆதாரில் பெயர், பிறந்த தேதி தவறாக இருந்தால் உடனடியாக உங்களது PAN கார்டை கொண்டே ஆதாரில் திருத்தம் செய்து கொண்ட பிறகே PAN கார்டில் ஆதாரை இணைக்க முடியும்.

PAN கார்டிலே திருத்தம் இருந்தால் அதை திருத்துவதற்கு தற்பொழுது வசதி இல்லை. விரைவில் அதற்கான வசதி ஏற்படுத்தும் பொழுது PAN கார்டை திருத்தம் செய்த பின்னரே ஆதாரை இணைக்க முடியும்.

மேற்கண்ட சேவைகள் எமது மையத்தில் செய்துத் தரப்படும்.