OBC NCL சான்றிதழ் யாருக்கு? ஏன், எதற்கு?

    

OBC NCL சான்றிதழ் யாருக்கு? ஏன், எதற்கு?

இங்குள்ள தகவல் BC&MBC இனத்தவருக்கு மட்டுமே, மற்றவர்களுக்கு இது தேவைப்படாது 

 


மாணவர்கள் பள்ளி படிப்பு முடிந்து மேற்படிப்பிற்கு தமிழ் நாட்டிலுள்ள கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் போது பிற்படுத்தப்பட்டவராயிருந்தால் BC சான்றிதழும், மிகவும் பிற்படுத்தப்பட்டவராயிருந்தால் MBC சான்றிதழும் பெற்றிருப்பார்கள் அதை வைத்து விண்ணப்பிக்கலாம். ஆனால் மைய அரசின் கல்வி அல்லது வேலை தொடர்பாக விண்ணப்பிக்க நேர்ந்தால் அதற்கு BC, MBC சான்றிதழ் பயன்படுத்த முடியாது, ஏனென்றால் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தால் 27% இட ஒதுக்கீடு பெற தகுதியானவர்களுக்கு (பொருளாதார ரீதியில்) Non Creamy Layer என்றும் வருட வருமானம் அதிகமாக உள்ளவர்கள Creamy Layer என்றும் பிரித்துள்ளது. Creamy Layerல் வருபவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு (மைய அரசில்) கிடையாது. இவர்கள் முன்னேறிய வகுப்பினராக கருதப்படுவர் (General Category). 

1993-ம் ஆண்டு முதல் OBC-க்கு ஆண்டு வருமானம் கணக்கிடும் முறை கொண்டு வரப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை என ஆண்டு வருமானம் உயர்த்தப்பட்டும் வருகிறது. தற்போதுள்ள ஆண்டு வருமானம் 8 லட்சம் ஆகும். 

                                                 Image Credit: https://www.clearias.com

மாணவரின் பெற்றோர் வணிகராக இருந்து அவரின் மொத்த ஆண்டு வருமானம் (Gross Annual Income) 8 லட்சத்திற்கு மேல் போனால் அவர்கள் Creamy Layerல் வந்துவிடுவார்கள், அரசு பணியில் உள்ள Group A & B Officer-களும் (40 வயதுக்குள்ளவர்கள்) இட ஒதுக்கீடு கிடையாது. 

இதே அவர்கள் சம்பளதாரராக இருந்தாலோ அல்லது விவசாய வருமானம் பெறுபவராக இருந்தாலோ அந்த வருமானம் 8 லட்சத்திற்கு மேல் இருந்தாலும் அவர்கள் Non Creamy Layerல் வந்துவிடுவார்கள். இட ஒதுக்கீடுக்கு தகுதியானவர்கள். 

தமிழ்நாட்டில் இந்த சான்றிதழ் ஜாதி + வருமானம் இரண்டையும் சேர்த்து அளிக்கப்படும் சான்றிதழாகும். இந்த சான்றிதழ் ஏப்ரல் 01 முதல் மார்ச் 31ம் நாள் வரையே செல்லுபடியாகும். அதாவது ஒரு நிதியாண்டு மட்டுமே செல்லத்தக்கது. பின் மீண்டும் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். 

OBC NCL சான்றிதழ் பெறத் தேவையானவை: 

மாணவரின் புகைப்படம், ஆதார் அட்டை, குடும்ப (ஸ்மார்ட்) அட்டை, ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் மற்றும் இருப்பிட சான்றிதழ்.

இ சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கப்படும் இச்சான்றிதழை VAO, RI, Tahsildar ஆகியோரால் சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழை இணையத்திலேயே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மைய அரசின் OBC (BC&MBC) வகையில் வரும் இனங்களை கீழ்வரும் லிங்கில் பார்க்கலாம்: 

http://www.ncbc.nic.in/user_panel/GazetteResolution.aspx?Value=mPICjsL1aLv%2b2hza1cVSjGj2lbN6VTmq%2fWN4CcSyOxTDAvIblVnkv9NFuhO%2bdz42 

 

Source: http:www.ncbc.nic.in, https://www.clearias.com