உழவர் கௌரவ நிதி திட்டம் PM Kisan - KYC

உழவர் கௌரவ நிதி திட்டம் PM Kisan- KYC கட்டாயம் செய்ய வேண்டுமா?

உழவர் கௌரவ நிதி திட்டம் பயனாளிகள் அனைவரும் கட்டாயம் KYC செய்ய வேண்டும்.

மைய அரசினால் 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட உழவர் கௌரவ நிதி திட்டமானது, மாநில அரசால் தேர்வு செய்யப்பட்ட தகுதியான உழவர்களுக்கு வருடத்திற்கு ரூ.6000 (ரூ.2000 மூன்று தவணைகளாக) நேரிடையாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

பயனாளிகள் எவ்வாறு, எஙகு KYCஐ செய்து கொள்ளலாம்: பயனாளி தமது கைபேசி & ஆதார் அடடையுடன் பொது சேவை மையங்களுக்கு சென்று தங்களது KYC யை பதிவு செய்யலாம். 

இதை செய்யாவிடில் அவர்களது கௌரவ நிதி நிறுத்தப்பபடவும் வாய்ப்ப்புள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற்ற சில பயனாளிகள் இறந்த பிறகும் அவர்களது கணக்கில் பணம் செலுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த KYC பயனாளிகளின் வாழ்நாள் சான்றாக அமைகிறது.