Jeemain, NEET போன்ற தேசியளவில் நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களின் கவனத்திற்கு…

ஆதார் அட்டை 


 

மாணவர்கள் தங்களது 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் உள்ள பெயர், பிறந்த தேதி போன்றே ஆதார் அட்டையில் இருக்க வேண்டும், இல்லையென்றால் அவ்வாறு திருத்தம் செய்து கொள்ள வேண்டும். 

உதாரணத்திற்கு 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில், Kumar A என்று மாணவரின் பெயருக்கு பின் அவரது இனிசியல் இருக்கும், அது போன்றே ஆதாரிலும் இருக்க வேண்டும். சில மாணவர்களின் ஆதாரில் பிறந்த தேதியில் வருடம் மட்டுமே இருக்கும், அப்படியிருக்கும் மாணவரின் ஆதாரை திருத்தம் செய்வதற்கு முன் ஆதார் இணையதளத்திற்கு சென்று இ-ஆதார் தரவிறக்கம் செய்து பாருங்கள், அதில் பிறந்த தேதி நாள்-மாதம்-வருடம் என முழுமையாக வரும், அதில் ஏதேனும் தவறு இருந்தால் ஆதார் மையம் சென்று திருத்தி கொள்ளுங்கள். 

தற்பொழுது இ-ஆதார் தரவிறக்கம் செய்யும் போது அதில் முகவரியில் S/o, D/o, C/o (தந்தை/பாதுகாவலர்) பெயர் வருவதில்லை. தந்தை பெயர் இல்லையென்று யாரும் ஆதாரை திருத்தம் செய்யத் தேவையில்லை, அவ்வாறு செய்தாலும் தந்தை பெயர் அதில் இடம் பெறாது என்பதை நினைவில் கொள்க, மாறாக பெற்றோர் ஆதாரை ஆதாரமாக வைத்து முகவரி மாற்றம் செய்யும் பொழுது அதில் பாதுகாவலர் பெயர் (C/o), பெயர் இடம் பெறும் (தாயாரின் ஆதாரை ஆதாரமாக வைத்து செய்தால் தாயாரின் பெயரே பாதுகாவலர் பெயராக இடம் பெறும்) 

 

ஜாதி சான்றிதழ் 

வருமானம், இருப்பிடம் & ஜாதி சான்றிதழ் விண்ணப்பிக்கும் போதும் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் உள்ளவாறே (பெயருக்கு பின் இனிசியல்) பதிவு செய்யுங்கள், அவ்வாறில்லாமல் மாற்றம் ஏதேனும் இருந்தால் சான்றிதழ் விண்ணப்பிக்கும் முன்பே இ-சேவை CAN Registration-ல் திருத்தம் செய்த பின்னரே சான்றிதழக்கு விண்ணப்பியுங்கள் (இ-சேவை பெயர் திருத்தம் செய்ய சில நேரங்களில் ஒரு வாரம் கூட ஆகலாம்) 

மாநில அளவில் தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது, வேலை & கல்வி எதுவாகவிருந்தாலும் BC, BC-M, MBC இனத்தை சார்ந்த மாணவர்களுக்கு BC, BC-M, MBC ஜாதி சான்றிதழ் இருந்தால் போதுமானது. ஆனால், தேசியளவில் விண்ணப்பிக்கும் போது BC, BC-M, MBC இனத்தினர் OBC ஆக கருதப்படுவர். OBC யில் NCL சான்றிதழ் இருந்தால் மட்டுமே அதற்கான இடஒதுக்கீட்டை பெற முடியும். 

OBC சான்றிதழ் பற்றி விரிவான தகவலுக்கு இதை OBC NCL கிளிக் செய்து தெரிந்து கொள்க. 

 

https://cdnbbsr.s3waas.gov.in/s3f8e59f4b2fe7c5705bf878bbd494ccdf/uploads/2025/10/20251019724489097.pdf